தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.26, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த இரவு நேரக் காவலாளியை போதை ஆசாமி ஒருவர் கம்பால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 

இந்த பேருந்து நிலையத்திலிருந்து  திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர‌். 


இந்நிலையில் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு காவலாளி ஜெயக்குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மது போதையில் கையில் தடியுடன் வந்த ஒருவர் அவரை கம்பால் சராமாரியாகத் தாக்கினார். இதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை தடுக்க முயன்றனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து இன்று பேருந்து நிலையத்தில் விசாரித்த போது நேற்று இரவு ஒய்வு  பெற்ற ராணுவ வீரரான ஜெயக்குமார் பேருந்து நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தபோது ஒருவர் குடிபோதையில் வந்து இங்கு ஹோட்டல் எங்கே இருக்கிறது என கேட்டுள்ளார் அப்போது வெளியே உள்ளது என காவலாளி தெரிவித்துள்ளார் அப்போது வெளியே சென்ற அவர் உடனே திரும்பி தடியுடன்  வந்து காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 


புறக்காவல் நிலையம் செயல்படுத்தபடுமா?

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. மேலும் போலீசார் முறையாக ரோந்து பணியிலும் ஈடுபடவில்லை எனவும், பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மது மற்றும் கஞ்சா போதையில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள மாநகராட்சி காவலர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது காவலாளி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/