தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் பொருட்டு 23.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முழு விவரங்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மார்ச், 2024

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் பொருட்டு 23.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முழு விவரங்கள்.

தூத்துக்குடி, மார்ச் - 24, தமிழகத்தில் 16.03.2024 அன்று மக்களவை 2024 தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தொகுதி எண் 36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் பொருட்டு 23.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
        
     

36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான 16-3-2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமீறல்களை தடுத்தல், தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல்  ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் விவரங்கள்  பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.1. தேர்தல் தொடர்பாக வரப்பெற்ற புகார் மனுக்கள் விவரம்:
C -VIGIL செயலி மூலம் -14,  கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் -10, வாட்ஸ்அப் செயலி மூலம் -2 மற்றும் இணையதளம் வாயிலாக - 12 என மொத்தம் இதுவரை 38 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை  அனைத்தும் முடிவு காணப்பட்டுள்ளன.2. பறிமுதல் செய்யப்பட்டவை விவரம்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு  தலா 3 பறக்கும் படை குழுவினர், 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் என 6 குழுவினர் சுழற்சி முறையில்  24 மணி நேரமும் மொத்தம் 108 குழுவினர் பணியில் உள்ளனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்புகுழுவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கணக்கு கண்காணிப்பு குழுவும் பணியில் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் ரூ.1,86,750/- தூத்துக்குடி தொகுதியிலும், ரூ.6,00,000/- கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியிலும் என மொத்தம் ரூ.7,86,750/-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சேர்;த்து மொத்தம்  ரூ.20,244/- மதிப்புள்ள மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத்தவிர  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ.15,00,000/- மதிப்புள்ள 20 மடிக்கணினிகள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ. 27,000/- மதிப்புள்ள 250 ஹாட் டிபன் பாக்ஸ் என மொத்தம் ரூ.15,27,000 மதிப்புள்ள  இலவச பொருட்கள் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3. அரசியல் கட்சிகள் விளம்பரம் அகற்றுதல்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பொது இடங்களில்  596 சுவர் விளம்பரங்கள், 3510 சுவரொட்டிகள், 453 விளம்பர பதாகைகள் மற்றும் 504 இதர விளம்பரங்கள் அகற்றப்பட்டன. மேலும் தனியார் இடங்களில் உள்ள 330 சுவர் விளம்பரங்கள், 1545 சுவரொட்டிகள், 219 விளம்பர பதாகைகள் மற்றும் 214 இதர விளம்பரங்கள் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்ட காலக்கெடுவான 72 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டன. இதைத் தவிர புகாரின் அடிப்படையில் விளம்பரங்கள் பறக்கும் படைகளால் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.4. தேர்தல் பார்வையாளர்கள்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிடுவதற்கு மரு. S.S. ஸ்ரீஜு IRS, மற்றும் அஜய் ரூமல் கர்டே IRS ஆகிய இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை அஜய் ரூமல் கர்டே செலவினப் பார்வையாளர் (செல்: 8925921302) மேற்பார்வை செய்வார்கள்.  அதேபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை மரு.S.S.ஸ்ரீஜு செலவினப் பார்வையாளர் (செல்: 8925921301) மேற்பார்வை செய்வார்;கள். மேலும், பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் திவேஷ் செஹரா இ.ஆ.ப., மற்றும் காவல் பார்வையாளர் சத்யாவீர் கட்டாரா, இ.கா.ப., ஆகியோர் விரைவில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இப்பார்வையாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தவுடன் அவர்கள் பயன்படுத்த உள்ள பிரத்யேகமான அலைபேசி எண்கள் தனியே வெளியிடப்படும்.5. பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட கூட்டங்களின் விபரங்கள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 16.03.2024 அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த  பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது அதைத் தொடர்ந்து  17.03.2024 அன்று அனைத்து அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், தனியர் அடகுகடை மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.  அதே போல் 18.03.2024 அன்று அனைத்து வங்கியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. 19.03.2024 அன்று அனைத்து நிலையான கண்காணிப்பு குழு மற்றும் கூடுதல் செலவின பார்வையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. ஊடகங்களுக்கு சான்று வழங்கும் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 19.03.2024 அன்று நடத்தப்பட்டது. 
மேலும், பாராளுமன்ற தொகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும்; வாகன அனுமதி கோருவதற்கும்  வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் SUVITHA செயலி மூலம் விண்ணப்பிக்கும்போது ஒற்றை சாளர மையம் மூலமும் ENCORE செயலி மூலமும் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களாலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாலும்  உரிய பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் வரப்பெற்ற 81 மனுக்களில், 25 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 21 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 6 மனுக்கள் சம்பந்தப்பட்ட நபர்களாலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளன. 6. எவரும் விடுபடாமல் அனைத்து தரப்பினரும் 100 மூ வாக்களித்துஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள்:
தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் அறிவிப்பாணை  வெளியிட்ட  நாள்  முதல் 5 தினங்களுக்குள் படிவம் 12 டி மூலம் 85 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு  வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக விருப்பம் பெற்று வீட்டிலிருந்தே அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியினை ஏற்படுத்த அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், அத்தியாவசியமான சேவைத்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின்  தொடர்பு  அலுவலர் மூலம் விருப்பம் பெற்றும் அஞ்சல் வாக்கு அளிக்கும் மையம் மூலம் வாக்களிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 13,156 மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 11,470 ஆகியோருக்கு வாக்குச் சாவடிக்கு வராமல் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் 12டி வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதில் நேற்றைய தினம் (23.03.2024)  வரை  4662  12டி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய சேவையில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின்  தொடர்பு அலுவலர் மூலம் படிவம் 12டி வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.  7. வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 09.03.2024 அன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
 


21.03.2024 அன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை இரு சக்கர வாகனப் பேரணியும் மாவட்டத் தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நடத்தப்பட்டது. 
மேலும், வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தினை அறிவுறுத்தும் வகையில் 'தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா" என்ற தேர்தல் வாசகத்தினை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய பல்வேறு பகுதிகளில் மொத்தம் 131 பேரணிகள்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.8. வேட்பு மனுத் தாக்கல்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய 20.03.2024 முதல் இதுவரை (22.03.2024) நான்கு சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர் என மொத்தம் 5 வேட்பாளர்களால்  6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சுயேட்சை வேட்பாளர் 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.9. வாக்குச் சாவடி பணியாளர்கள்:
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஈடுபடுத்தப்படும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதல் கட்ட சுழற்சி முறை பணி ஒதுக்கீடு (Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களால் 21.03.2024 அன்று நடத்தப்பட்டது. இதில் 1624 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,  1624 வாக்குச்சாவடி அலுவலாகள்; -1, 1624 வாக்குச்சாவடி அலுவலர்கள் -2, 1624 வாக்குச்சாவடி அலுவலர்கள்; -3 மற்றும் 198 வாக்குச்சாவடி அலுவலர்கள்; - 4  மற்றும் 20மூ கூடுதல் பணியாளர்கள் 1340 பேர் என மொத்தம் 8,034 வாக்குச் சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேற்கண்ட பணியாளர்களுக்கு 23.03.2024 அன்று சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6 மையங்களில் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.10. வாக்கு எண்ணிக்கை மையம்:
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறுவது தொடர்பாக பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 22-3-2024  அன்று, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால், வாக்கு எண்ணிக்கை மையத்தை அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தயார் செய்வதற்கான  உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 11. சுழற்சி முறையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்தல்:
தற்போது இருப்பிலுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் டBU-4431, CU-2090, VVPAT-2595 எண்ணிக்கையில் வாக்கு பதிவு இயந்திரங்கள்  மற்றும் கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றில் 120 சதவிகிதம், விவிபேட் இயந்திரங்களில் 130 சதவிகிதம் ஆகியவை முதல் கட்ட சுழற்சி முறையில்  (RANDOMIZATION)  இஎம்எஸ் (EVM management system) 2.0 என்ற இணையதளத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால், அங்கீகிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில்  1950 வாக்குப் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் 2111 விவிபேட் இயந்திரங்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவ்வியந்திரங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பறையிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், 24-3-2024  காலை 07.30 மணியளவில் திறக்கப்பட்டு இஎம்எஸ் 2.0 என்ற மொபைல் செயலி வாரியாக ஸ்கேன் செய்யப்பட்டு, தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கண்டென்யர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகளில்  அமைந்துள்ள பிரேத்யேக வைப்பறைகளில் 1செக்சன் காவல் பாதுகாப்புடன், 24ஓ7 சிசிடிவி கண்காணிப்புடன் வைப்பீடு செய்யப்படவுள்ளன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/