தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 19, தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் பத்திரிக்கை செய்தி.


இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024  அறிவிப்பு வெளியிடப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


தொகுதி எண் 36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனுக்கள் 20.03.2024 முதல் 27.03.2024 வரை (23.03.2024 மற்றும் 24.03.2024 ஆகிய பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளது. 


பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனு, படிவம் 2A இல் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட வேட்பு மனு படிவம் 2A வினை ECI/CEO, இணையதளத்தில் (www.eci.gov.in & www.elections.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு படிவம் 2A தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.


வேட்பு மனுக்கள் 20.03.2024 முதல் 27.03.2024 வரை (23.03.2024 மற்றும் 24.03.2024 ஆகிய பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிக்குள் இடைப்பட்ட எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாளில் முற்;பகல் 11:00 மணிக்கு முன்பும்;, பிற்பகல் 3:00 மணிக்குப் பின்பும் வேட்பு மனு பெறப்படாது. 


வேட்பாளரின் வேட்பு மனுவினை முன்மொழிபவர்(கள்), வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்த (தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி) வாக்காளராக இருக்க வேண்டும்.  வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியை சார்ந்த வேட்பாளராக இருந்தால் ஒரு நபரும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளராகவோ அல்லது  சுயேச்சை வேட்பாளராகவோ இருந்தால், 10 நபர்களும்  முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும்.


தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு 3 வாகனங்கள்  மட்டுமே, அதுவும் மேற்படி அலுவலகத்தின் 100 மீட்டர் எல்லைவரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளர் மற்றும் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு  வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட, ஆனால் நான்கு வேட்புமனுக்களுக்கு மிகாமல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/