தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வங்கிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வங்கிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 18,
தூத்துக்குடி பாராளுமன்ற  பொதுத் தேர்தல், 2024 தொடர்பாக வங்கிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கூட்டம் இன்று (18.03.2024) நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான பணம் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றினை தவறாக பயன்படுத்தியது என தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வந்தால் தேர்தல் ஆணையம் வங்கிகள் பணம் கொண்டு செல்வதற்கான நிலையான வழிமுறைகளை(Standard Operating Procedure) வகுத்துள்ளது. 

தற்போது ESMS (Expenditure Seizure Management System) என்ற செயலியில் உருவாக்கப்படும் QR Code மூலம் வங்கியின் மூலம் கொண்டு செல்லும் பணமா என தேர்தல் பறக்கும்படை மற்றும் இதர அலுவலர்கள் அறிய முடியும் எனினும் வங்கிகளுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்களின் பணத்தை கொண்டு செல்லக் கூடாது. 


பணம் கொண்டும் செல்லும் வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம் மற்றும் ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும் தேர்தல் பறக்கும் படை மற்றும் இதர ஆய்வு அலுவலர்களால் இவ்வாவணங்களை கோரும் போது சமர்ப்பிக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். 

வங்கிகள் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றங்களை நிதி தொடர்பான புலனாய்வு முகமைகளுக்கு வழங்க வேண்டும். பத்து இலட்சத்திற்கு அதிகமான பண வைப்பிடு மற்றும் பணம் திரும்ப எடுத்தல் தொடர்பான பரிமாற்றங்களை வழங்க வேண்டும். வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பின் அது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பின் அதன்  விவரங்களை அளிக்க வேண்டும்.  

இது தொடர்பான விவரங்களை வருமான வரித் துறைக்கு அளிக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பண வைப்பீடு மற்றும் திரும்ப எடுத்தல் தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும். 

அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க கோரும் போது உடனடியாக வங்கி கணக்கு தொடங்க உதவிபுரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற பொது தேர்தல் 36, தூத்துக்குடி தொகுதியில் நல்ல முறையில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அனைத்து வங்கிகளிடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கோரப்பட்டது என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/