ஆழ்வார்திருநகரி - பெண்கள் குளிப்பதை, கட்டுப்பாடு இன்றி படம் எடுக்கும் ட்ரோன்கள் - மக்கள் அச்சம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

ஆழ்வார்திருநகரி - பெண்கள் குளிப்பதை, கட்டுப்பாடு இன்றி படம் எடுக்கும் ட்ரோன்கள் - மக்கள் அச்சம்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 18, திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி ட்ரோன்கள் மூலம், சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு IP ADDRESS (VPN) பயன்படுத்தி கழுகு பார்வையில் படம் எடுத்து சமூக தளங்களில் பதிவிட்டு வந்தனர்.


இதனால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் அஞ்சினர், இது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், திருச்செந்தூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க விடுவது பற்றி கட்டுப்பாடுகளை விதிதிருந்தார். மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர் தண்டிக்கப்படுவார் எனவும் எச்சரித்து இருந்தார்.


தற்போது ஆழ்வார்திருநகரி அருகே திருக்கோளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தி பொதுவெளியில் பறக்க விடுவது வாடிக்கையாக உள்ளது. 


இந்நிலையில் இன்று (மார்ச் 18) TN 69 media என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் வாய்க்காலில் குளிப்பதை படம் எடுத்து தனது சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் நவதிருப்பதி போன்ற புராதன கோவில்களையும் வீடியோ படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ட்ரோன்கள் பயன்படுத்துவோர், இது போன்று வேறு ஏதேனும் தவறான கோணத்தில் வீடியோ எடுக்க வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர்.


நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க ப்பட்டு உள்ளதால் அரசு பற்பல கட்டுப்பாடுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதே நேரத்தில் இவ்விதமாக ட்ரோன்கள் பறக்க விடுவது பற்றியும் கட்டுப்பாடுகளை விதித்து அதனை முறைப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் இதனை பரிசீலனை செய்து ட்ரோன்கள் பறக்க தடை விதித்து, கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/