சென்னை புழல் சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறு அமைக்க முற்பட்ட தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஏப்ரல், 2024

சென்னை புழல் சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறு அமைக்க முற்பட்ட தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல ஆர்ப்பாட்டம்.


சென்னை புழல் தேசிய நெடுஞ்சாலை இருந்து இரட்டை ஏறி செல்கின்ற சாலையில் அருகாமையில் அமைந்துள்ளது அக்குவா ஜி வண்ண மீன்கள் உற்பத்தி ஏற்றுமதி தொழிற்சாலை இந்த தொழிற்சாலை அடுத்து மீன்கள் வளர்த்து அவைகளை பராமரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் வண்ண மீன்கள் பராமரிப்பதற்காக பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது இதற்காக நான்கு ஆழ்துளை கிணறுகள் சட்டத்துக்கு புறம்பாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை எதிர்த்தும் நான்கு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளதால் தங்கள் வீட்டில் உள்ள போர்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதாகவும் இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமுறை இந்த நிறுவனத்திடம் ஆழ்துளை கிணறுகளை மூட கூறி கூறி உள்ளதாகவும் ஆனால் இந்த நிறுவனம் மீண்டும் மீண்டும் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது.

 

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இதேபோன்று ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரம் கொண்ட வாகனத்தை அக்வாஜி வண்ண மீன்கள் ஏற்றுமதி நிறுவனம் கொண்டு வந்த பொழுது அதனை கண்ட பொதுமக்கள் அவர்களிடம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என கூறியுள்ளனர் அதற்கு உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 24-வது வார்டு மாவட்ட உறுப்பினர் சேட்டு அவர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்து அவர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் ஒத்து வராததால் திடீரென சாலை நடுவே பொது மக்களோடு அமர்ந்து கவுன்சிலர் சேட் அவர்கள் சாலை மறியல் ஈடுபட்டார்.


இதனால் அப்பகுதியில் வாகனங்கள் முழுமையாக செல்ல முடியாமல் அங்கங்கே நிறுத்தப்பட்டதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலை அறிந்து அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது திடீரென போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது பதட்டம் நிலவியது. 


அக்வாஜி நிறுவனத்திடம் உள்ளே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என போலீசார் கூறி ஆழ்துளை கிணறு அமைக்க வந்த இயந்திரத்தை திருப்பி அனுப்பினர் அதன் பின் போலீசார் பொதுமக்களிடையே நாளை புகார் அளியுங்கள் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்ததை அடுத்து போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக இன்று மாதாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இதன் தொடர்பாக மாமன்ற உறுப்பினர் சேட்டு அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து அக்குவா ஜி மீன் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/