இராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடப்பேரி கிராமம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி காயமடைந்த 18 நபர்களை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தொடர்ந்து தகவல் அறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் உஷா நந்தினி இடம் கேட்டறிந்தனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பார்வையிட்டனர் மேலும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தண்ணீர் பிஸ்கட் பால் வழங்கி நலன் விசாரித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக