சீர்காழி ரயில் நிலையம் துவங்கி 148 ஆண்டை மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக பயணிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

சீர்காழி ரயில் நிலையம் துவங்கி 148 ஆண்டை மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக பயணிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கப்பட்டது.


சீர்காழி நகருக்கு சோழன் ரயிலில் வருகை தந்த பயணிகளை சீர்காழி இரயில் சங்கமம் சார்பாக வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வை சீர்காழி கோட்ட ரயில் பயனாளர்கள்  சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் மயிலாடுதுறை ரயில்பயணிகள் சங்கத்தின்தலைவர் மகாலிங்கம் செயலாளர் சாமி கணேசன் பொருளாளர் சுந்தர் சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் செயலாளர் ரஜினி துரைராஜ் கிருஷ்ணன் இந்து மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் சுவாமிநாதன் நாம் தமிழர் கட்சிமாவட்ட அமைப்பாளர் காசிராமன் சமூக ஆர்வலர் ஜெக சண்முகம் சீர்காழி வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் மார்க்ஸ் பிரியன் நலம் அறக்கட்டளை சுதாகர் சீர்காழி நகர மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன் ராஜேஷ் வெற்றி நம்ம சீர்காழிஇயக்க தலைவர் பூவரசன் மனோஜ் சீர்காழி கோட்ட ரயில் பயனாளர்கள் சங்க பொறுப்பாளர்கள்வள்ளியப்பன் முத்துராமலிங்கம் சந்தானம் கஜேந்திரன் மும்மூர்த்தி மகேஸ்வரன் செந்தில் முருகன் கோவிந்தராஜன் கோபாலகிருஷ்ணன். இந்நிகழ்வை இல்லமா சீர்காழி கோட்ட ரயில் சங்கத் தலைவர் தில்லை நடராஜன் ஓர் ஒருங்கிணைத்து செய்தார்.


இந்நிகழ்வில் 20க்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் கலந்து கொண்டனர் விழாவின் ஒரு பகுதியாக மர கன்று நடப்பட்டது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/