மயிலாடுதுறை டு சேலம் சென்ட்ரல் ரயில் பாத்ரூம் சுத்தமில்லாமல் கதவு திறக்க முடியாமல் பயணிகள் அவதி மயிலாடுதுறை சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஜூலை, 2024

மயிலாடுதுறை டு சேலம் சென்ட்ரல் ரயில் பாத்ரூம் சுத்தமில்லாமல் கதவு திறக்க முடியாமல் பயணிகள் அவதி மயிலாடுதுறை சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தனர்.


மயிலாடுதுறை டு சேலம் சென்ட்ரல் ரயில் பாத்ரூம் சுத்தமில்லாமல் கதவு திறக்கம முடியாமல் பயணிகள் அவதி மயிலாடுதுறை சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளர் அவர்களிடம் தெரிவித்தனர்.

7.4.24 இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து சேலம் சென்ற ரயிலில் பாத்ரூம் கதவு சரியில்லாமல் திறக்க முடியாமலும் பாத்ரூம் சுத்தம் இல்லாமல் பயணிகள் அவதிபட்டனர், ரயிலில் சென்ற பயணிகள் மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருச்சி கோட்ட மேலாளருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது.


கோட்ட மேலாளர் அவர்கள் எந்த ரயில் பெட்டியில் புகார் என்பதை தெரிவியுங்கள் எனக் கூறினார், உடனடியாக சக பயணிகள் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி என கூறினார்கள் கோட்ட மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக திருச்சி கோட்ட மேலாளர் உத்தரவிட்டதன் பேரில் திருச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ரயிலுக்கு வந்து பாத்ரூம் சுத்தம் செய்யப்பட்டு ஓட்டை உடைசல் ஆன பழுதடைந்த பாத்ரூம் கதவு சரி செய்யப்பட்டு வண்டி இயக்கப்பட்டுள்ளது, வண்டியில் சென்ற பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த கோட்ட மேலாளர் அவர்களுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/