அரியலூர் அரசு கலை கல்லூரியில் வழிகாட்டும் பயிற்சி வகுப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூலை, 2024

அரியலூர் அரசு கலை கல்லூரியில் வழிகாட்டும் பயிற்சி வகுப்பு.


அரியலூர்  அரசு கலை  கல்லூரியில், கடந்த மூன்றாம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியது.


பள்ளி முடித்து புதியதாக கல்லூரிக்கு வந்துள்ளதால், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சு.ஸ்ரீதரன்  வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் ம.இளையராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் மீமிகிரி நடிகன் சந்துரு, மானஸா அகாடமி தனலட்சுமி, சிவசக்திவேல் இளம் விஞ்ஞானி ஜெயலட்சுமி, ஆகியோர் அனைவரும் முதலாம் ஆண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வும் அறிவுரைகளும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.

 

அனைத்து துறையும் சார்ந்த பேராசிரியர்கள்  உட்பட, 750க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/