காவல்துறை இயக்குனர் அலுவலக உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு வாகன சோதனையாக வாகன விதிமீறல்கள் சட்டவிரோதமாக வாகனங்களில் மதுபானங்கள் கடத்துதல், பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள குற்றவாளிகள் திருட்டு குற்றங்களில் ஈடுபடக் கூடிய நபர்கள் சட்டவிரோதமாக ஆயுத கடத்தல் ஆகியவை தொடர்பாக வாகன சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.மீனா அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலைய சரகத்திலும் மற்றும் சோதனைச் சாவடியிலும் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. அதன்படி வாகன சோதனை நடத்தியதில் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 800 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக