தமிழகத்தின் முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தமிழ்நாடு நேஷனல் ஹெல்த்தி மிஷின் ஒப்பந்த அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்களுக்கு ஊதியமாக மாதம் 13 ஆயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா காலங்களில் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் மையங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகவும் இதற்காக கொரோனா ஊதிய மதிப்பெண் அளிப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும், மாவட்டம் தோறும் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாடகை அடிப்படையில் பணிபுரியும் பிசியோதெரப்பிஸ்ட்களை PF மற்றும் வருடாந்திர 5% ஊதிய உயர்வு போன்ற பணி பலன்களை கிடைக்குமாறு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க வலியுறுத்தியும் அரசு மருத்துவமனைகளில் உள்ளDEIC NCD Geriatric பிரிவுகளில் பணிபுரியும் என் முறை மருத்துவர்களின் பணி நேரம் காலை 7:30 முதல் 3:30 என மாற்றி அமைக்க வலியுறுத்தியும், இயன்முறை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக