தருமபுரி மாவட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களபணியாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

தருமபுரி மாவட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களபணியாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு  முன் களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள் சென்னையில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கிய கோரிக்கைகளாக "சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்" தினக்கூலி மாத ஊதியமாக மாற்ற வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ஜெயவேல் (மாநிலத் தலைவர்), சதீஷ் (மாநில செயலாளர்), பூமிநாதன் (மாநில பொருளாளர்), தோழர் எம்.இராதாகிருஷ்ணன் (மாநில பொதுச் செயலாளர் AITUC), Dr. இரவீந்திரநாத். M. B.B.S.மருத்துவர் சங்கத் தலைவர், Dr. சாந்தி M.B.B.S.DGO.BGL. DNB (மருத்துவர் சங்க துணைத் தலைவர்) தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் பிரபாகரன் (மாவட்ட தலைவர்), மாது (துணைத்தலைவர்), சந்திரன் (மாவட்ட செயலாளர்),  மாரியப்பன் (மாவட்டத் துணைச் செயலாளர்), அண்ணாமலை, ஆனந்தி, மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, மணிகண்டன், பழனியம்மாள், ராதாகிருஷ்ணன், உள்ளிட்டதமிழ்நாடு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/