போடி நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக இன்று பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு போடி நகரக் அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் செயலாளர் SVSஞானவேல் அவர்களின் தலைமையில்
அ இ அ தி மு க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நகரக் கழக செயலாளர் VPRபழனிவேல்ராஜ் அவர்கள் தலைமையில் மற்றும்
போடி நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இணைச் செயலாளர் VSமணி அவர்களின் முன்னிலையில் போடி நகரக் கழக நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு போடி நகரில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக