ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி .

 


ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி .


 ஆண்டிபட்டி, டிச.25 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு ,அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .


     வைகை சாலை பிரிவில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச் சிலைக்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான லோகிராஜன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ தவசி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ,பேரூர் கழக செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில், கட்சியினர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .அதனைத் தொடர்ந்து பீடத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் படிப்பகம் மற்றும் நாடார் தெருவில் உள்ள எம்ஜிஆர் நினைவகம் ஆகிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் .


    நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் சேட் அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி வடிவேல், கணேசன் ,பேரூர் கவுன்சிலர் பாலமுருகன் ,மகளிர் அணி கொடியம்மாள், மாணவர் அணி முருகேசன், நிர்வாகிகள் பாலச்சந்திரன் ,சாம்சன்,வீரக்குமார், கபாலி ,மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad