துபாயில் கிரீன் குளோபல் சார்பாக மிகப் பிரம்மாண்டமான ரத்த தான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

துபாயில் கிரீன் குளோபல் சார்பாக மிகப் பிரம்மாண்டமான ரத்த தான முகாம் நடைபெற்றது.


ஐக்கிய அமீரக துபாயில் கடந்த 22ஆம் தேதி கிரீன் குளோபல் சார்பாக மிகப் பிரம்மாண்டமான ரத்த தான முகாம் நடைபெற்றது, இந்த ரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தார்கள் மனிதப் பிறவியாக பிறந்து அந்த மனித பிறவிக்கு தங்கள் ரத்தத்தில் மூலம் உதவி செய்ய முடியும் என்ற எண்ணத்தில் நூற்றுக்கணக்கான கலந்துகொண்டு ரத்தம் தானம் செய்தார்கள் இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரீன் குளோபல் ஏற்பாட்டாளர்கள் முனைவர் ஜாஸ்மின் மற்றும் அல் மாஸ் மெஹ்மீட், சிறப்பாக செயல் படுத்தினார்கள்.


கீழை கம்யூனிடி சென்டர் (KCC) நண்பர்கள் தங்களது ஒத்துழைப்பை இந்த நிகழ்வுக்கு வழங்கினார்கள்.. அப்துல் ரஹ்மான், ஜைனுலாபுதீன் (ஜெனா), எஸ் கே வி சேக், பாஷித், ராசிக், பாய்ஸ் மற்றும் ஜியரத், இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமீரக நாட்டைச் சார்ந்த மர்ஜுக் ஆல் மன்சூறி அவர்களும், காஸிம் ஹுசைன் அவர்களும், திரு உஸ்மான் அலி அவர்களும். சம்யுத்த பவன் உணவகத்தின் மேலாளர் ராமமூர்த்தி அவர்களும். UAE தமிழ் சங்கத்தின் நிறுவன ரமேஷ் அவர்களும்


தமிழக குரல்நாளிதழ் தமிழக குரல் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl, Jaguar பிரின்டிங் பிரஸ் ஷா மற்றும் நூர்ஜஹான் அமீரகத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தார்கள் 2024 ஆம் ஆண்டு கடைசி மாதத்தில் மனிதர்களை உயிர்காக்கும் இரத்தத்தை கொடுத்து தானம் செய்த அத்தனை பேருக்கும் சந்தோஷத்தோடு உற்சாகத்தோடு தங்கள் ரத்தத்தை மற்ற மனிதர்களுக்காக கொடுத்து வழங்கினார்கள் கிரீன் குளோபல் மேலாளர் முனைவர் ஜாஸ்மின் அவர்களும் நன்றி தெரிவித்து வந்தவர் அனைவருக்கும் samyuktha bhavan மூலம் உணவு பரிமாறப்பட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad