அமீரக அஜ்மானில் நடைபெற்ற அன்வரின் "வெற்றி எனும் மாய குதிரை" புத்தக வெளியீட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 டிசம்பர், 2024

அமீரக அஜ்மானில் நடைபெற்ற அன்வரின் "வெற்றி எனும் மாய குதிரை" புத்தக வெளியீட்டு விழா.


ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள கிரௌன் பிளாசா ஸ்டார் ஹோட்டலில் அன்வர் குழும நிறுவனங்களின் நிறுவனர் அன்வர்தீன் எழுதிய "வெற்றி எனும் மாய குதிரை"  புத்தகத்தின் வெளியீட்டு விழா அஜ்மானின் ஆட்சிளார்கள் குடும்பத்தைசேர்ந்த ஷேக் அஹ்மத்  சுல்தான் அலி பின் ரஷீத் அல்நுஐமி  (Ruler Family, Ajman - UAE) முன்னிலையில்    சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக  இதில் அமீரகத்தின்  தொழில் அதிபர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அன்வர் குழுமத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  


இப்புத்தக நூல் வெளியீட்டு விழாவில்  நூலின் முதல் பிரதியை அமீரகத்தைசேர்ந்த அலி சயீத் அலி புத்தவில் அல்மத்ரூஷி, தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர்   மொகிதீன், பிஎம் குரூப் மற்றும் ரேடியோ கில்லி நிறுவனர்  முனைவர் கனகராஜா அல்அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் தலைவர் முபாரக்  முஸ்தபா, ஆகியோர் வெளியிட, ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கல்வி கற்றல் மேலாண்மை நிறுவனர் முனைவர் ஸ்ரீ  ரோகினி, , எழுத்தாளர் ஜெஸிலா,  சமூக சேவகி முனைவர் ஜாஸ்மின், ரேடியோ கில்லி இயக்குனர் கோமதி  கனகராஜா, தமிழக குரல் தமிழக குரல் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl ,.தினகுரல் நாளிதழ் வளைகுடா  தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா  ஆகியோர் பெற்று கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad