ஷார்ஜா சபாரி மாலில் சொப்பானம் கலைபள்ளி வழங்கிய சார்காட்சவம்-2024 கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 டிசம்பர், 2024

ஷார்ஜா சபாரி மாலில் சொப்பானம் கலைபள்ளி வழங்கிய சார்காட்சவம்-2024 கொண்டாட்டம்!


ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் உள்ள  சபாரி மாலில்  அமீரகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சொப்பனம் கலை பயிற்சி மையத்தின் 16-வது ஆண்டு விழா  சர்கோட்சவம் 2024 என்ற தலைப்பில் அதன்  நிறுவனர் கங்காதரன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அணுராதா கங்காதரன் தலைமையில் ஸ்பிரேட் ஸ்மைல் ஈவன்ட்  நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தொகுத்து வழங்க சிறப்பாக   நடைபெற்றது. நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்  கே. பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். வினோத்குமார் , கிருஷ்ணமூர்த்தி, திருமதி அனுராதா கங்காதரன் கலந்துகொண்டு  மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்தனர் மேலும்  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகர்கள் சுப்பு அருணாசலம், லொள்ளு சபா புகழ் ஜீவா  உள்ளிட்ட சினிமா துறையினர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக,துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், தமிழக குரல் தொலைக்காட்சி தமிழக குரல் நாளிதழ் வளைகுடா முதல்மை நெறியாளர் kamalkvl .சல்வா மியூசிக் நிறுவனர் பகவதி ரவி,  மற்றும்l , GV ப்ரோடக்சன் பிரசாத்,  ஹோப் நிறுவனர் கௌசர்,  தினகுரல் நாளிதழ் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் வாரஇதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்க நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, கோகுல் பிரசாத், மிருதுளா ரமேஷ்  ஆகியோர்  உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களுக்கு சொப்பானம் கலை பயிற்சி மையத்தின் நிறுவனர் டாக்டர் கங்காதரன் மேலாண்மை இயக்குனர் அனுராதா கங்காதரன் இணை நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்கள் வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad