உளுந்தூர்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் உள்ளே 3 அடி அளவில் தண்ணீர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 டிசம்பர், 2024

உளுந்தூர்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் உள்ளே 3 அடி அளவில் தண்ணீர்


உளுந்தூர்பேட்டை  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் உள்ளே 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்துள்ளார். நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளதால் தண்ணீரை வெளியேற்ற பெற்றோர்கள் கோரிக்கை...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆசனூர் இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின்  உள்ளேயும் வெளியேயும்  தொடர் மழையின் காரணமாக 3 அடி அளவுக்கு பள்ளியின் உள்ளேயும் வெளியேயும் மழை நீரும் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் இருந்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்று ஒரு நாள் மட்டும் அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளார் இது குறித்து அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளதால் உடனடியாக பள்ளியின் உள்ளே நிற்கும் மழை நீரையும் கழிவு நீரையும் வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad