திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த முகமது முஜம்மில் வாணியம்பாடியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சேர்மன் அஸ்லாம் பாஷாவிடம் பணியாற்றி வந்துள்ளார், இந்த நிலையில் முகமது முஜம்மில் ஆதார் மற்றும் பேன் கார்டை பயன்படுத்தி (பாரம் இன்டர்நேஷனல் கம்பெனி) நிறுவி அதன் மூலம் 20 கோடிக்கு வரி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என ஆவணம் முகமது முஜம்மில் வந்துள்ளது இது குறித்து அஸ்ஸலாம் பாஷாவிடம் கேட்கும் பொழுது இதெல்லாம் கேட்கக்கூடாது வேலை செய்யும் ஆள் நீ எனக் கூறி மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது இதனால் மணமுடைந்த முகமது முஜம்மில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் அதேபோல் வாணியம்பாடி ஹாஜி தெரு பகுதியைச் சேர்ந்த முகமது காசிப்(23) என்பவரும் ஜிஎஸ்டி மோசடியில் அஸ்லாம் பாஷா ஈடுபட்டுள்ளதாக புகார் அளித்தார், அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செங்கண் திப்பு சுல்தான் தெரு பகுதியைச் சேர்ந்த பஸ்லு என்ற நபரும் அஸ்லாம் பாஷா என்னை அலுவலகம் அழைத்து கத்தி கட்டி மிரட்டினார்கள் எனக் கூறி புகார் அளித்தார்.
மேலும் முன்னாள் காங்கிரஸ் மைனாரிட்டி சேர்மன் அஸ்லாம் பாஷா மீது அடுக்கடுக்காக புகார் எழுத நிலையில் மூன்று பேர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக