கடலூர் மத்திய மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நெய்வேலி இந்திரா நகர் பி1 ப்ளாக் மாற்று குடியிருப்பு மணி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மத்திய மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார், சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பின் நிறுவனர் சீத்தாராம் முன்னிலை வகித்தார், இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் யுவராஜ், மாநில பொருளாளர் ஜெகதீசன், மாநில இணை செயலாளர் பானு கோபன், தலைமை நிலைய செயலாளர் ரஜினிராஜ், மாநில துணை செயலாளர் பாபு, மாநிலத் துணை செயலாளர் செந்தமிழ் கொற்றவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொல்காப்பியன், மாவட்ட செயலாளர் விஜயரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வடக்குத்து மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக