20 ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி நினைவுச் சின்னத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

20 ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி நினைவுச் சின்னத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி.


2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம்  தேதி ஏற்பட்ட சுனாமி துயரம் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் மாநகர திமுக சார்பில் மேயர் சுந்தரி ராஜா மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


விசிக சார்பில் விசிக அமைப்புச் செயலாளர் திருமார்பன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மற்றும் கட்சி நிர்வாகிகள்  மலர் வலையம்  வைத்து அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சாமி ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செய்தனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad