குள்ளஞ்சாவடி அருகே உள்ள தம்பிபேட்டை பகுதியில் விளை நிலங்களில் சாய்ந்துள்ள மின் கம்பங்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

குள்ளஞ்சாவடி அருகே உள்ள தம்பிபேட்டை பகுதியில் விளை நிலங்களில் சாய்ந்துள்ள மின் கம்பங்கள்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தம்பி பேட்டை பகுதியில் விளை நிலங்களில் சாய்ந்துள்ள மின்கம்பம் கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை மற்றும் சூறைக்காற்றால் மின் கம்பங்கள் அனைத்தும் விளை நிலங்களில் சாய்ந்துள்ளது, மேலும் மின் கம்பிகள் அனைத்தும் பொதுமக்கள் பயணிக்கும் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடப்பதால் அவ்வழியே பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அருந்து கிடக்கும் மின் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து விடுமோ என்ற பயத்துடன் கடந்து வருகின்றனர்.

மேலும் அருகே உள்ள பனை மரத்தில் மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளதால்  மின்வாரியத்தின் புதுயுக்தியை மக்கள் வியப்புடன் பார்த்து கடந்து சென்று வருகின்றனர், மேலும் மின்துறை அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்து சாய்ந்துள்ள மின் கம்பம் மற்றும் அருந்து கிடக்கும் மின் கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad