ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர்.க. அன்பழகன் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா, ஒன்றிய கழகச் செயலாளர். மற்றும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது, சேந்தமங்கலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி.பவானி வடிவேலு, ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய துணை செயலாளர்கள், முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன் ஒன்றிய பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகம், அரிகிருஷ்ணன், பெருமாள், கிளை செயலாளர் சம்பந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக