கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் போலி தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீ தடுப்பு ஒத்திகை செய்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் மாணவர்களுக்கு தீ தடுப்பு முறைகள் குறித்தும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது, நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருப்பதி வெங்கடாஜலம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர், மேலும் சுமார் 50 மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக