நெமிலி அருகே புது கண்டிகை கிராமத்தில் பவானி வடிவேலு தலைமையில்தேசிய காசநோய் ஒழிப்பு சிறப்பு மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 டிசம்பர், 2024

நெமிலி அருகே புது கண்டிகை கிராமத்தில் பவானி வடிவேலு தலைமையில்தேசிய காசநோய் ஒழிப்பு சிறப்பு மருத்துவ முகாம் !


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்கண்டிகை கிராமத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்,ஊராட்சி மன்ற தலைவர்.பவானி வடிவேலுஅவர்கள் தலைமையில் நடைபெற்றது!


இதில்நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்!. இம்முகாமில் சிறப்பு அம்சமாக (CBNAAT) சளி பரிசோதனை மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் எடை, உயரம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது, மேலும் காசநோய் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது!


இம்முகாமில் சயனபுரம், புதுகண்டிகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்! இந்த முகாமில் சிகிச்சை மேற்பார்வையாளர். ஸ்டீபன் பொன்னையா, ஆய்வக நிட்புணர் காலேஷா, சுகாதார ஆய்வாளர் முபாரக், பாஷா, சுகாதார பார்வையாளர் யாசா விக்டர், காயத்ரி, லாவண்யா, மற்றும் நடமாடும் எக்ஸ்ரே மருத்துவ குழு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்!


செய்தியாளர்.மு. பிரகாசம். நெமிலி தாலுகா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad