போலீஸ் அக்கா திட்டம்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கம்!
_திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, தலைமையில் "போலீஸ் அக்கா" திட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அக்கா திட்டம் என்பது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கொண்டு மாவட்டத்திற்குள் முக்கிய கல்லூரிகள மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடவும், தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி மாவட்ட காவல்துறை சார்பில் "போலீஸ் அக்கா" நியமித்துள்ளோம். இத்திட்டத்தில் செயலி ஒன்று (QR Code) புதிதாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அச்செயலியை கொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வுகள் காணலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் வாணியம்பாடி செய்தியாளர் மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக