கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னதானகுப்பம் கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வாழை இலைகளை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர், குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்திலிருந்து சின்னதான் குப்பம் பகுதிக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் சின்னதானகுப்பம் பகுதியில் உள்ள மின்மாற்றிலிருந்து அருகிலுள்ள தேசிகன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் கொட்டகைக்கு தம்பு சாமி என்பவரின் மகன்களின் வாழை தோட்டத்தில் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தம்பு சாமி என்பவரின் வாழை தோட்டத்தில் கீழ் மின் கம்பி தாழ்வாக சென்றதால் அண்மையில் குள்ளஞ்சாவடி மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் குள்ளஞ்சாவடி மின்வாரிய ஊழியர்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பியின் நடுவே மரக்கழி ஒன்றை வைத்து சரி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் சூறைக்காற்றினால் அந்த மரக்கழி கீழே விழுந்து மீண்டும் மின்கம்பி தாழ்வாக உள்ளது மேலும் மின் கம்பத்திலிருந்து செல்லும் மின் கம்பிகள் மிகவும் சிதலமடைந்து எந்நேரமும் அருந்து விழும் சூழலில் உள்ள நிலையில் குள்ளஞ்சாவடி மின்வாரிய அதிகாரி மற்றும் மின்வாரியம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மின்னகம் என்ற செயலி மூலம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் குள்ளஞ்சாவடி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மின் கம்பிகள் மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் வாழை இலை அறுவடை செய்ய தோட்டத்திற்குள் இறங்கும் கூலித் தொழிலாளர்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது, மேலும் உயிர் சேதம் ஏற்படும் முன் மிகவும் மோசமான நிலையில் உள்ள மின் கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிற்கு அப்பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக