குறிஞ்சிப்பாடியில் ரயில் மறியல் ஈடுபட முயன்ற விசிகவினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

குறிஞ்சிப்பாடியில் ரயில் மறியல் ஈடுபட முயன்ற விசிகவினர்.


புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக  இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பார்த்து நீங்கள் அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசுவதை விட்டுவிட்டு கடவுளை பற்றி பேசினால் உங்களுக்கு புண்ணியம்மாவது கிடைக்கும் என்று பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா  கண்டித்தும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலக வேண்டும்  அமித்ஷாவை கைது செய்ய வேண்டும்  என்கிற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க குறிஞ்சிப்பாடி ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் சார்பாக குறிஞ்சிப்பாடி இரயில் நிலையத்தில் காலையில் 9:10  கடலூர் (டு) திருச்சி பயணிகள் வந்த இரயிலை மறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தின் போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும்  இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது சிறிது நேரம் ரயில் நிலையம் பதட்டத்துக்குள்ளானது. அம்பேத்கர் புகைப்படத்தையும் வாழ்க அம்பேத்கர் ஜெய் பீம் என்ற முழக்கத்தோடு கட்சியினர் இரயிலை மறித்தனர், இரயில் மறியல் போராட்டத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கு மேலான இரயில்வே போலீஸ் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளை பேருந்து மூலம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டத்தில் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் இரா.பாலமுருகன் மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் திருமேனி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் கௌசல்யா, மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி, வடலூர் நகர செயலாளர் தங்க  ,ஜோதிமணி, வரதராஜன், சின்ராசு ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, ஜானகிராமன், சேகர் பிரசாத் அருள் பிரசாத்,  தம்பிபேட்டை வரதராஜ், இளைய பார்த்திபன்,  மாவட்டத் துணை அமைப்பாளர் நந்த ஆதவன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை  கட்சியினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad