வாணியம்பாடி அருகே பாலாற்று நீரில் நுரை பொங்கி நீர் ஓடுவது விஷமிகளால் நீரில் ரசாயனம் கலந்து சதி வேலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வாணியம்பாடி அருகே பாலாற்று நீரில் நுரை பொங்கி நீர் ஓடுவது விஷமிகளால் நீரில் ரசாயனம் கலந்து சதி வேலை.

 


வாணியம்பாடி அருகே பாலாற்று நீரில் நுரை பொங்கி நீர் ஓடுவது விஷமிகளால் நீரில் ரசாயனம் கலந்து சதி வேலை.


விஷமிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். வாணியம்பாடி தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குநர் இக்பால் அஹமத் பேட்டி.


வாணியம்பாடி, டிச.22- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.


இந்த தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அனைத்தும் வளையாம்பட்டு பகுதியில் உள்ள வாணியம்பாடி தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படு, அங்கே நீரை சுத்தகிரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


மழை பெய்யும் போதெல்லாம் வாணியம்பாடி அருகே மாராபட்டு பகுதிகளில் உள்ள பாலாற்றில் நுரை பொங்கி நீர் செல்வதால் தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீர் பாலாற்றில் திறந்து விடுவதாக பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சந்தேகம் அடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று காலை மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் அதிகமான நுரை பொங்கி நீர் ஓடி கொண்டு இருந்தது. இதனை கண்டு சிலர் பாலாற்று நீரில் நுரை பொங்க காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு எடுக்கப்பட்ட தண்ணீரில் சோதனை மேற்கொண்டதில் டி.டி.எஸ்(TDS) 1200 இருந்தது. தோல் கழிவு நீர் கலந்து இருந்தால் டி.டி.எஸ்(TDS)20,000க்கு மேல் இருந்து இருக்க வேண்டும். ஆகையால் நுரை பொங்கி ஒடும் நீரில் தோல் கழிவுநீர் கலக்கப்படவில்லை என தெரிவித்து, ஆற்று நீரை ஆய்வுக்கு அனுப்ப எடுத்து சென்றனர்.


இது குறித்து வாணியம்பாடி தோல் தொழிற்சாலை கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குநர் இக்பால் அஹமத் செய்தியாளர்களை சந்தித்து கூறியது:-


நகரத்தின் ஒட்டுமொத்த கழிவுநீர் பாலாற்றில் விடுவதால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று கன மழை பெய்யும் போது மழைநீருடன் கழிவுநீர் வெள்ளத்தில் அடித்து செல்லுகின்றது. அப்போது நீரில் இது போன்ற நுரரை ஏற்படும்.


சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து மீண்டும் மறு சூழ்ச்சியாக நீரை பயன்படுத்தி வருகின்றோம். 


தோல் கழிவு நரில் வரும் நுரை அவ்வளவு வெள்ளை நிறத்தில் இருக்காது, மண் கலரிலும் அதிகமான துர்நாற்றம் வீசும்.


தொடர்ந்து பாலாற்று நீரில் சில விஷமிகள் நுரை பொங்கும் ரசாயனம் கலந்து வருவதால் இது போன்ற வெள்ளை நிறம் நுரை ஏற்படுகிறது. ஆகையால் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம் என்றார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் இரா.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad