தனிநபர் இடமிருந்து சுமார் 1000 கிலோ எடையுள்ள இரும்பு பெட்டியை மீட்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்குமா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

தனிநபர் இடமிருந்து சுமார் 1000 கிலோ எடையுள்ள இரும்பு பெட்டியை மீட்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்குமா!



குடியாத்தம் ,ஜன 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் அருகே துணை தபால் நிலையம்  கடந்த.  40 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதை அடுத்து அங்கிருந்து 3 வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது அங்கு போதுமான இட வசதி இல்லாததால் மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு தனியார் கட்டடத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது இந்நிலையில் இதற்கு முன்பு செயல்பட்டு வந்த தனியார் கட்டடத்தின் உரிமையாளருக்கு சில மாதங்கள் வாடகை பாக்கி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது இதன் காரணமாக கட்டிட உரிமையாளர் போஸ்ட் ஆபீஸ் க்கு சொந்தமான பல்லாயிரம் மதிப்புள்ள இரும்பு பெட்டி ஒன்றை தராமல் வைத்துள்ளார். இந்நிலையில் அந்த இரும்பு பெட்டி வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ளதால் மழை வெயிலில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. எனவே அதிகாரிகளும் வாடகை நிலுவை பாக்கி செலுத்தாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே தனியார் கட்டிட  உரிமையாளருக்கு தர வேண்டிய வாடகை உடனே வழங்கி.மத்திய அரசுக்கு சொந்தமான இரும்பு பெட்டியை மீட்க அதிகாரிகள் நடக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad