மது பாட்டில்கள் சம்பந்தமாக சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக.
வேலூர் ,ஜன 7 -
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று 07.01.2025-ம் தேதி வேலூர் உட்கோட்ட துணைக்காவல் கண் காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் அவர்களின் தலைமையில், பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார் சின்ன அல்லாபுரம், நேருஜி தெரு அருகே வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட, 180 ML அளவு கொண்ட 125 மதுபாட்டி லகள் மறறும்TN 23 CM 4180, BAJAJ PLATINA என்ற இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சந்திரன் (வயது 56 )த/பெ வஜ்ரவேல், நேருஜி தெரு, சின்ன அல்லாபுரம், வேலூர் என்பவரை கைது செய்து, எதிரிமீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக