பேரணாம்பட்டில் காட்டன் சூதாட்டம் ஒழிப்பு: போலீசாருக்கு
பொதுமக்கள் பாராட்டு!
வேலூர்,ஜன.7. -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பல வருடங்களாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வந்தது. குறிப்பாக தரைக்காடு பகுதியில் கடை வைத்து காட்டன் சூதாட்டம் நடத்தினர். இந்த காட்டன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டு ஒரு சில மனைவிமார்கள் கணவனை விட்டு பிரிந்து சென்றார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வேலை செய்து வாங்கி வரும் கூலியை பெரும்பாலானவர்கள் காட்டன் சூதாட்டத்தில் பணத்தை எல்லாம் இழந்துவிட்டு வெறுமனே வீட்டுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் காட்டன் சூதாட்டத்தை மிகவும் அரும்பாடுபட்டு இரவு பகல் பாராது அயராது உழைத்து நிரந்தரமாக ஒழித்து விட்டார்கள். இதனால் பேரணாம்பட்டு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பேரணாம்பட்டில் காட்டன் சூதாட்டம் ஒழிக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது ஆண்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை அப்படியே மனைவியிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இது குறித்து பேரணாம்பட்டு பொதுமக்கள் காவலர்களை கருணையின் நிறம் காக்கி என்று மனம் குளிர பாராட்டி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக