கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் ஊராட்சியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவரது சொந்த பயன்பாட்டிற்காக வீட்டுக்கு அருகிலேயே அமைத்துக் கொள்வதாகவும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்படுத்துமாறு ஊருக்கு மத்தியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக