நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறத்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறத்தல்

 

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறத்தல் :


மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்பது நியூமோவிரிடே குடும்பத்தின் ஒற்றை - இழை RNA வைரஸ் ஆகும், மேலும் இது ஏவியன் மெட்டாப் நியூ மோவைரஸ் (AMPV) துணைக்குழு C உடன் நெருக்கமாக தொடர்புடையது.


2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் முதன் முறையாக தனிமைப்படுத்தப்பட்டது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) முதன்மையாக குழந்தைகளைப் பாதிக்கிறது, சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது வயதானவர்களையும் பாதிக்கிறது. இந்த கிருமி, மூக்கு சளி, நெஞ்சு சளி மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.


HMPV வைரசை RNA RT PCR பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்த வைரசை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து மற்றும் தடுப்பூசி எதுவும் இல்லை. போதிய ஓய்வு, நிறைய திரவ உணவு, காய்ச்சல், சளிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது வேண்டும். இருமும் போதோ, தும்மும் போதோ, வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணி வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.


பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் (Face Mask) அணிய அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்கவும். நோய் வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. துண்டுகள், சோப்பு, கைக்குட்டை போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. பொது மக்கள் (HMPV) வைரஸ் குறித்து சந்தேகம் இருப்பின் சுகாதாரத்துறையின் சார்பில் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மையம் (GMCH THE NILGIRIS CASUALTY NUMBER) : 9342330053 மற்றும் TOLL FREE NUMBER (DDHS) :104 இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad