திருப்பூர் 50 ஆவது வார்டில் பல்வேறு நல திட்ட பணிகள் முடிக்கப்பட்டும், துவக்கபட்டும் உள்ளது. கவுன்சிலர் அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

திருப்பூர் 50 ஆவது வார்டில் பல்வேறு நல திட்ட பணிகள் முடிக்கப்பட்டும், துவக்கபட்டும் உள்ளது. கவுன்சிலர் அறிவிப்பு


திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்தீன் அவர்கள் தனது வார்டில் நடைபெற்று முடிந்த மற்றும் புதிதாக துவக்கப்பட்ட மக்கள் நல பணிகள் பற்றி அறிக்கை விடுத்துள்ளார்  அதன் விபரம் 

திருப்பூர் மாநகராட்சி 50 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பாக கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.


முதலாவதாக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் 13 லட்ச ரூபாய் மதிப்பில் அண்ணாநகர் பகுதியில் பால்வாடி அமைக்கும் பணி நடைபெற்று  கொண்டுள்ளது.


அண்ணாநகர் பகுதியில் கழிவறைகள் இடியும் தருவாயில் இருந்தது அதனை அகற்றிவிட்டு புதிதாக ரூபாய் 32 லட்சம் மதிப்பில் கழிவறைகள் கட்டும் பணி நடைபெற்று  கொண்டுள்ளது.

இரண்டு மாதத்துக்குள் ஐந்து கல்வெட்டு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பெரிய தோட்டம் 2 வீதி புஷ்பா நகர் 4 பேமஸ் பேக்கரி அருகாமையில் உள்ள  உப்பு தண்ணீர் தொட்டி இடிந்து விழும் தருவாயில் இருந்தது அதனை அகற்றிவிட்டு தற்போது புதிதாக பில்லர் அமைத்து உப்பு தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டுள்ளது.


 தற்போது பெரிய தோட்டம் 4 வது வீதி புஷ்பா நகர் 5 வது வீதி அண்ணா நகர் எதிரே மற்றும் காங்கேயம் பாளையம் புதூர் இரண்டு கல்வெட்டு பாலங்கள் மற்றும் அதே பகுதியில் இடிந்த நிலையில் இருந்த சாக்கடை கால்வாய் அகற்றப்பட்டு புதிதாக சாக்கடை கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கேயம் பாளையம் புதூர் பகுதியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.


தற்போது புஷ்பா நகர் பகுதியில் புதிய இரண்டு கல்வெட்டு பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

22.01.2025 புதுக்காடு இரண்டாவது வீதியில் புதிய கல்வெட்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. மேலும் புஷ்பா நகர், குமாரசாமி காலனி, பெரிய தோட்டம், குணங்கல் காடு, காஞ்சி காமாட்சி நகர் எக்ஸ்டென்ஷன் வீதி, காங்கேயம் பாளையம் புதூர், எஸ் கே என் லே-அவுட் இரண்டாவது வீதி இளங்கோ லே-அவுட், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தார் சாலைகளும் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது அதன் பட்டியல் மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் காங்கேயம் பாளையம் புதூர் பகுதியில் புதிய உப்பு தண்ணீர் தொட்டி மற்றும் மின் பம்பு பொருத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க படவுள்ளது. என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad