ராணிப்பேட்டை , ஜன 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு தலைமையில் 76- வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ஒன்றிய பெருந்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாஸ்பிரகாஷ், ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக