கோவை கா.கா. சாவடி பகுதியில் உள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியில் 76வது குடியரசு தின விழாவானது கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியினை கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.ஜி. பார்த்திபன் ஏற்றி குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். அவர் தனது குடியரசு தின உரையில் மாணவ மாணவியர்கள் வேட்கையுடனும் தற்போது நிலவும் தங்களது புதிய தொழிநுட்ப கல்விக்கு ஏற்றவாறு திறன் மேம்பாட்டு பயிற்சியினை கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். பின்னர் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி கூற மாணவ மாணவியர் உறுதி மொழி எடுத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் திரு.கே.ஏ.அக்பர் பாஷா அவர்கள் தலைமை வகித்தர், கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. அ.தமீஸ் அகமது அவர்கள் முன்னிலை வகித்தர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விளையாட்டுத் துறை இயக்குநர் திரு. சிபி,செல்விஉமையா,நாட்டுநலபாணிதிட்டஅதிகாரி திரு. தினேஷ்குமார்சிறப்புற ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாணவ-மாணவியர்களுக்கு கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக