காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காந்திநகர் மாவட்ட கிளை நூலகம் இணைந்து 76வது குடியரசு தின விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காந்திநகர் மாவட்ட கிளை நூலகம் இணைந்து 76வது குடியரசு தின விழா !


காட்பாடி ,ஜன 26 -
 
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காட்பாடி காந்திநகர் மாவட்ட கிளை நூலகம் இணைந்து 76 வது குடியரசு தின விழா 26.01.2025  அன்று காலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். நல்நூலகர் தி.மஞ்சுளா வரவேற்று பேசினார். வாசகர் வட்ட தலைவர் வி.பழனி, மக்கள் சேவை சங்கத்தின் துணை செயலாளர் பா.குணாளன், போக்குவரத்து குழும துணைத்தலைவர் எஸ் ரமேஷ்குமார் ஜெயின், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு முன்னிலையில் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.  செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் எஸ்ரமேஷ்குமார் ஜெயின், மேலாளர் எஸ்.அம்பானி, ஜானகி, மூர்த்தி பொருளாளர் ஆர்.சீனிவாசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காட்பாடி துளிர் பள்ளியில் 76வது குடியரசு தின விழா காட்பாடி துளிர் பள்ளியில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை த.கனகா தலைமை தாங்கினார்.  பள்ளி தாளாளர் செ.நா.ஜனார்த்தனன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கல்வி உலகம் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு அவர்களுக்கு வழங்கி பாராட்டப்பட்டார். அறங்காவலர்கள் வி.பழனி ஆசிரியர்கள் சே.சித்ரா, மலர்கொடி, பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad