காரைக்குடி 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு காரைக்குடி ரயில்வே நிலையத்திற்கு நவீன இருசக்கர வாகனங்களை வழங்கி சிறப்பித்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

காரைக்குடி 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு காரைக்குடி ரயில்வே நிலையத்திற்கு நவீன இருசக்கர வாகனங்களை வழங்கி சிறப்பித்தனர்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைகறை பவுண்டேஷன் சார்பாக, அதன் நிர்வாக இயக்குநர் திரு.VR.RM. விஜய் வீரப்பன் அவர்களின் பெரும் கொடையாக, 2 நவீன இருசக்கர நாற்காலிகள் இன்று (ஜன- 26 காலையில், திரு. பஸ்வான் ( ஸ்டேசன் மாஸ்டர்), கோட்ட வணிக ஆய்வாளர் (DCI) திரு.தேசிகன், ரயில் பயணச்சீட்டு வழங்கல் ஊழியர் திரு.நரசிம்மன் ஆகியோரிடம், ( KCRPWA - KKDI) காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தலைவர் திரு.VR. இராமநாதன் தலைமையில், செயலாளர் பி.கோவிந்தசாமி (எ) இராமு முன்னிலையில் வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் தொழில் வணிகக் கழக நிர்வாகிகள் சாமிதிராவிடமணி, KN.சரவணன் (SLP), GTS. சத்தியமூர்த்தி, S. சையது, "அப்டெக்" வெங்கடாசலம், KR. சோலை, இராம சண்முகநாதன், PL.மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


இதை நன்கொடையாக வழங்கி சிறப்பித்த தொழில் வணிகக் கழக இணைச் செயலாளர் VR. இராமநாதன், அவரது அருமை மைந்தர் தம்பி VR.RM. விஜய் வீரப்பன் ஆகியோர்களை மனம் மகிழ வாழ்த்திப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்


சேம்பர் ஆப் காமர்ஸ் CCIKKDI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad