இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவின் 76 -வது குடியரசு தின விழா" கொண்டாட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 76 வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் சிங் கலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்கவிட்டு சுதந்திரத்தின் பெருமையை வலிமையும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார், அதனைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 72 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களையும், மாவட்ட அளவிலான சிறப்பாக பணியாற்றிய 92 காவல்துறையினருக்கு நற்சான்றிதழையும், சிறப்பாக பணியாற்றிய 210 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 2,03600/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முன்னாள் படை வீரர்களுக்கு நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூபாய் 75,000/- க்கான போர் நடவடிக்கையில் உயிர் தியாகம் செய்த படை வீரரை சாய்ந்தோர்க்கான வருடாந்திர பராமரிப்பு மானியமும், கூட்டுறவுத்துறை சார்பாக 74 பயனளிக்கு 44,70.000/- க்கான மகளிர் சுய உதவி குழு கடன்களுக்கும், தாட்கோ சார்பாக 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வேளாண்மை துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூபாய் 2,325/- மதிப்பீட்டில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக பேட்டரி ஸ்ப்ரேயர் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிங் சல்பேட் 10 கிலோவும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மீன்வளத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 8 லட்சம் படகு சேதமடைந்ததற்கான நிவாரணத் தொகை என மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூபாய் 55,7095 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் செய்த அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கமுதக்குடி ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை புனித ஆந்த்ரேயா மகளிர் மேல்நிலைப் பள்ளி ராமநாதபுரம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தங்கச்சிமடம் முத்துப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மூலமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலை நிகழ்ச்சிகள் பல்வேறு அனைத்து மாணவ மாணவியருடைய மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், பாராட்டு சான்றிதழ் வழங்கினார் இவ்விழாவில் காவல்துறை துணைத் தலைவர் ராமநாதபுரம் (சரகம்) அபிநத் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், பரமக்குடி சார் ஆட்சியாளர், அபிலாஷா கௌர் உதவி ஆட்சியர் (பயிற்சி )முகமது இர்ஃபான், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக