கீழக்கரை டுவின்ஸ் ஆம்புலன்ஸ் நண்பர்கள் சார்பில் இரத்ததான முகாம்
76-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கமும் இராமநாதபுரம் மாவட்ட அரசு கல்லுரி மருத்துவமனையும் இணைந்து நடத்தும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம் முகாமிற்கு ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கத்தின் தலைவர் முகம்மது நசுருதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இரத்ததான முகாமை இராமநாதபுரம் வழக்கறிஞர் காளீஸ்வரன் துவங்கி வைத்தார்கள்.சிறப்பு விருந்தினராக கீழக்கரை அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் பிரியதர்சினி அவர்களும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அஹமது பசீர்தீன், கஃபார்கான், டாக்டர் அணீஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 700 மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு 68 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக