நெய்வேலியில் நடந்த 76 வது குடியரசு தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசியக் கொடியேற்றினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

நெய்வேலியில் நடந்த 76 வது குடியரசு தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசியக் கொடியேற்றினார்.


நெய்வேலியில் நடந்த 76 வது குடியரசு தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசியக் கொடியேற்றி வைத்து பேசுகையில். என்எல்சி நிறுவனம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தி திறனை 20,000 மெகாவாட்டாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படும் என்றார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இங்கு 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரதி விளையாட்டு அரங்கத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசியக் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


பின்னர் அவர் பேசியதாவது, என்எல்சி நிறுவனம் ஆரம்ப காலங்களில் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பழுப்பு நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான சூரிய ஒளி மற்றும் காற்றாலை வாயிலாக மின் உற்பத்தி நிலையங்கள் என இரண்டின் வாயிலாகவும் மின் உற்பத்தியில் ஈடுபட்டு நெடும் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.


நிறுவனத்தின் தற்போதைய மொத்த  மின் உற்பத்தி திறன் 6,731 மெகாவட்டாக உள்ளது, இதில்  பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி, காற்றாலை ஆகிய எரிசக்தி திட்டங்கள் அடங்கும். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் என் எல்சி.யின்மொத்த மின் உற்பத்தி திறன் 20,000 மெகாவட்டகா அதிகரிக்கப்படும் என  பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad