கடலூர் மஞ்சக்குப்பம் சேட்டுநகரை சேர்ந்தவர் அரவிந்த் என்கிற சாமிநாதன் (வயது 28). இவர் மஞ்சக்குப்பத்தில் பூக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் நள்ளிரவு மணி அளவில் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே அரவிந்த் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரவிந்த்தின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அரவிந்தை அப்பகுதி மக்கள் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அரவிந்த்தை கொலை செய்த நபர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார், அரவிந்த் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக