குடியரசு தினத்தை யொட்டி பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் சமுதாய கூடத்தில் 76 வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா தலைமை தாங்கினார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார், இதில் சுடுகாடு கொட்டகை அமைத்துக் கொடுத்தால் குடிநீர் மின்சாரம் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகள் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முன்னதாக செம்பனார்கோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். மேலும் திருக்கடையூர், ஆக்கூர், மடப்புரம், டீ. மணல்மேடு, கிள்ளியூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக