ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கிருத்திகை கிரிவலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர், நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத் தில் குன்றின் மீது வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கிருத்திகை நாளான நேற்று காலை வள்ளி தேவ சேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேக தீபாராதனை நடந்தது மாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மலை சுற்றி கிரிவலம் வந்த உற்சவரை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பஜனை குழுவினர் திருமுருகன் திருப்பாடல்களை பாடிய படி அரோகரா முழக்க மிட்டு கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் முடிந்த பின்னர் உற்சவரை தாலாட்டி பூஜைகள் செய்து வழி பட்டனர். நெமிலி உள்ளடக்கிய கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்தனர். அனை வருக்கும் கோயில் நிர்வாகம் சார் பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தர் மகர்த்தா முருகனடிமை குமார் மற்றும் விழா குழு வினர் செய்திருந்தனர்.
செய்தியாளர். மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக