அரக்கோணம் -காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் விபத்து இரண்டு பேர் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

அரக்கோணம் -காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் விபத்து இரண்டு பேர் உயிரிழப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை சேந்தமங்கலம் பகுதியில் உள்ள ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் வேன் பைக் மோதி பைக்கில் வந்த இருவர்கள் சம்பவ இடத்திலேயே பலி இவர்களின் விவரம் பின்வருமாறு நெமிலியைச் சேர்ந்தவர் சஞ்சய் 22 ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் 29 இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர்.


நேற்று இரவு வேலை நேரம் முடிந்து சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் எதிரே வந்த வேன் பைக் மீது மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தியாளர். மு. பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad