நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம் உதவி காவல் ஆய்வாளர் லோகேஷ் பங்கேற்பு!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம் உதவி காவல் ஆய்வாளர் லோகேஷ் பங்கேற்பு!.


ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுற்றுலா அவர்களின் ஆணைக்கிணங்க நெமிலி காவல் நிலை ஆய்வாளர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி நெமிலி காவல் துறை சார்பில் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் சரளாதேவி தலைமையில் வெற்றிச்செல்வன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக எமிலி உதவி காவல் ஆய்வாளர் லோகேஷ் கலந்துகொண்டு மாணவர்கள் நலன் கருதி போதைப்பொருள் விழிப்புணர்வு, சிக்னல் கடைப்பிடிப்பது குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது 18 வயதிற்கு மேற்பட்டோர் தான் வாகனம் ஓட்ட வேண்டும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் வண்டியை கைப்பற்றி விடுவோம், ரூ.25,000 பணம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறினார். 


அதுமட்டுமின்றி உங்களுடைய பெற்றோர் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவர்களிடம் தலைக்கவசம் அணிந்து வாகனம் எடுத்து செல்லுங்கள் என்று நீங்கள் தான் கூற வேண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் ஆட்டோ அல்லது நடந்து பள்ளிக்கு வருகை தாருங்கள் அது உங்கள் பாதுகாப்பிற்கு நல்லது என்று ஆலோசனை வழங்கினார்.


மேலும் போதை பொருட்கள் உபயோகப்படுத்தக்கூடாது அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே உடல் நலம் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் என்று மாணவர்களிடம் கூறினார். ஆசிரியர்களிடம் போதை பொருட்கள் உபயோகப்படுத்தினால் எங்களிடம் உடனே தெரியப்படுத்துங்கள் நாங்கள் விற்பனை செய்யும் கடையை கண்டறிந்து போதை பொருட்கள் விற்பனை செய்யாதவாறு செய்கிறோம் குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சென்று குளிக்க வேண்டாம் இதனால் விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள் வெண்ணிலா சபீனா ஜுபிடர் மணிமேகலை நெமிலி முதல் நிலைக் காவலர் தனசேகரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர். மு.பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad