நெமிலி ஊராட்சி ஒன்றிய ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான பண்முக கலாச்சாரப் போட்டிகள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது, இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான பண்முக கலாச்சாரப் போட்டிகள் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நெமிலி ஊராட்சி ஒன்றிய இயக்க மேலாளர் அலமேலு தலைமை வகித்தார். நெமிலி பிடிஓ இரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, சமத்துவ பொங்கல் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து மகளிர் குழுக்களுக்கு கோலப் போட்டிகள், கபடி, கோகோ மற்றும் கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
அதில் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டது. அப்போது உடன் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மரகதம், கீதா, பாக்கியவதி, சரோ, பத்மப்ரியா மற்றும் மகளிர் சுயுதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக