திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூடவுன் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர் கணவரை இழந்து தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க பெருமாள்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலையோரம் தள்ளுவண்டியில் வைத்து உணவகம் நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் அங்கு சாப்பிட வந்த இருவரில் ஒருவர் பார்சல் கட்டிக் கொண்டு சென்று விட்டதாகவும் மற்றொருவர் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டதால் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டில் எச்சில் துப்பியும், தள்ளு வண்டியை கீழ தள்ளி உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் இதனால் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5000 ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த சாமான்கள் சேதமடைந்துள்ளது.
மேலும் சட்டையை கழட்டி சாலையில் அமர்ந்து அராஜகத்தில் ஈடுபட்ட போதை இளைஞரை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் இளைஞரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விசாரணை செய்ததில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடியில் கணவனை இழந்த பெண் தள்ளு வண்டியில் வைத்து உணவகம் நடத்தி வந்த நிலையில் சாப்பிட்டு பணம் கேட்டதற்கு தள்ளு வண்டியை கீழே தள்ளி உணவகம் மற்றும் உணவாக பொருட்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக